ஒமிக்ரான் வகையின் நோயுண்டாக்கும் தன்மை குறைந்து வருவதாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் தடுப்பதிலும் அனுபவம் பெருகி வருவதாலும், ஒமிக்ரான் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், கடுமையான நோய் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஆகியவற்றின் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று பெய்ஜிங் சாவோயாங் மருத்துவமனையின் துணைத் தலைவர் டோங் ஜாவோஹுய் கூறினார்.
"ஓமிக்ரான் வகை முக்கியமாக மேல் சுவாசப் பாதையைப் பாதித்து, தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது," என்று டோங் கூறினார். அவரைப் பொறுத்தவரை, சீனாவில் தற்போது பரவி வரும் நோய்த்தொற்றில், மொத்த தொற்றுகளில் 90 சதவீதம் லேசான மற்றும் அறிகுறியற்ற பாதிப்புகளாக இருந்தன, மேலும் மிதமான பாதிப்புகள் (நிமோனியா போன்ற அறிகுறிகளைக் காட்டும்) குறைவாகவே இருந்தன. கடுமையான பாதிப்புகளின் (அதிக-அளவு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அல்லது ஊடுருவாத, ஊடுருவும் செயற்கை சுவாசம் பெறுபவர்கள்) விகிதம் இன்னும் குறைவாகவே இருந்தது.
"இது, (2019-இன் பிற்பகுதியில்) வுஹானில் நிலவிய சூழ்நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு, தொடக்ககால வைரஸ் வகையே நோய்ப் பரவலை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளான நோயாளிகள் இருந்தனர்; அவர்களில் சில இளம் நோயாளிகளுக்கு 'வெள்ளை நுரையீரல்' பாதிப்பும், கடுமையான சுவாசச் செயலிழப்பும் ஏற்பட்டன. ஆனால், பெய்ஜிங்கில் தற்போது ஏற்பட்டுள்ள நோய்ப் பரவலின்போது, குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சுவாச ஆதரவு அளிக்க, ஒரு சில கடுமையான நோயாளிகளுக்கு மட்டுமே செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படுகின்றன," என்று டோங் கூறினார்.
"நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், வேதி-கதிர்வீச்சு சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு, புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் தென்படாததால், பொதுவாக அவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை தேவையில்லை. அறிகுறிகளைக் காட்டுபவர்களுக்கு அல்லது நுரையீரல் சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் அசாதாரணமான முடிவுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே, மருத்துவப் பணியாளர்கள் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளின்படி கண்டிப்பாக சிகிச்சையை மேற்கொள்வார்கள்," என்று அவர் கூறினார்.
பதிவிட்ட நேரம்: டிசம்பர் 15, 2022


